தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை வட்டாரக்கிளையின் துணிச்சல் மிக்க முன்னாள் வட்டாரத் தலைவரும், நாமனூர் பள்ளியின் வரலாறு பட்டதாரி ஆசிரியையுமான திருமதி.பிச்சம்மாள் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நாமனூர் பள்ளியில் நடைபெற்றது..
விழாவிற்கு கிளைத்தலைவர் பால் டேவிட் ரொசாரியோ அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் குமரேசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.. பள்ளித் தலைமையாசிரியை வரவேற்றார்..
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்
வெற்றிவேந்தன், திருமுருகன், அசோக் பாரதி, கிளை இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம், கிளைப் பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்..
வெற்றிவேந்தன், திருமுருகன், அசோக் பாரதி, கிளை இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம், கிளைப் பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்..
கிளைச் செயலாளர் ஜெயக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பணி நிறைவு பெறும் ஆசிரியை திருமதி. பிச்சம்மாள் அவர்கள் ஏற்புரை வழங்கினார்..
விழாவில் வட்டாரத் துணைத்தலைவர்கள் வேணுகோபால், பஞ்சுராஜ், இணைச் செயலாளர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், சத்தியராஜ், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்..
மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கு பின் விழா இனிதே நிறைவுற்றது..
ஆசிரியை திருமதி புனிதாராணி நன்றி கூறினார்..
No comments:
Post a Comment