பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி சிவகங்கை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சிவகங்கை வட்டாரக் கிளையின் சார்பில் 08.07.2016 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் பால் டேவிட் ரொசாரியோ தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம் வரவேற்றுப் பேசினார். கிளைச் செயலாளர் ஜெயக்குமார், நகரக்கிளைத் தலைவர் சாஸ்தா சுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடக்கோரி அரசை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கிளைப் பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.







No comments:
Post a Comment