Wednesday, July 25, 2018

சிவகங்கை TNPTF : போராட்ட அறிவிப்பால் திருப்புவனம் வ.க.அ பணியிட மாற்றம் - இன்றைய ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு


சிவகங்கை TNPTF : போராட்ட அறிவிப்பால் திருப்புவனம் வ.க.அ பணியிட மாற்றம் - இன்றைய ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

🔥
🛡 மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கடுமையாக எச்சரித்த பின்பும் கல்வி நலனை பாதிக்கும் வகையில் அலுவலகப் பணிகளில் ஆசிரியர்களை தொடர்ந்து ஈடுபடுத்தி வந்த திருப்புவனம் வட்டாரக்கல்வி அலுவலரின் மாணவர் & சமூக விரோதப் போக்கைக் கடுமையாக கண்டிப்பதோடு இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மதிப்புமிகு சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பு சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

🔥
🛡 மாவட்டச் செயற்குழு முடிவின்படி மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (26.7.2018) மாலை 5.00 மணிக்கு சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற இருந்த நிலையில்,

🔥
🛡 மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட வட்டாரக்கல்வி அலுவலர் தன்னுடைய நேரடி பார்வையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனது அலுவலகத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்திற்கே பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்து,

🔥
🛡 சிவகங்கை வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.வசந்தி அவர்களை மானாமதுரைக்கும், மானாமதுரை வட்டாரக்கல்வி அலுவலர் திரு.ம.பு.இராஜேந்திரன் அவர்களை திருப்புவனத்திற்கும், *குற்றம் சாட்டப்பட்ட திருப்புவனம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.பி.பிரான்சிஸ் ஜஸ்டின் அவர்களை சிவகங்கைக்கும் முக்கோண நிர்வாக மாறுதலில்* மாற்றி திங்கள் கிழமை உத்தரவிட்டார்.

🔥
🛡 நேற்று (25.7.18) மாவட்டச் செயலாளருடன் அலைபேசி வழியாக பேசிய முதன்மைக்கல்வி அலுவலரின் நேரடி உதவியாளர்(உயர்நிலை) அவர்கள் புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரபூர்வமாக எடுத்துரைத்ததோடு, புகார் மனு குறித்து தொடர் விசாரணை நடைபெறும் எனவும், மாவட்ட ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்திட வேண்டுமெனவும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

🔥
🛡 அதன் பின் அலைபேசியில் பேசிய மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்கள். இயக்கம் சார்பாக நன்றி  தெரிவித்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவர் அதே இடத்தில் பணிபுரிந்தால் விசாரணை நேர்மையாக இருக்க வாய்ப்புகள் குறைவு என்பதால் முதல் கட்டமாக அவரை வேறு ஒன்றியத்திற்கு மாறுதல் வழங்க வேண்டும் என்ற இயக்கத்தின் நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

🔥
🛡 *முதன்மைக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் இன்று (26.7.2018) நடைபெற இருந்த மாவட்ட தலைநகர் கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக மாவட்ட மையம் முடிவாற்றியுள்ளது.*

🔥
🛡 மேலும் புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை கேட்டுக்கொண்டு, இதற்கான தொடர் நடவடிக்கைகளில் மாவட்ட மையம் தொடர்ந்து ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡 சிவகங்கை ஒன்றியத்தில் TNPTF அமைப்பின் பலமும், போர்க்குணமும் அனைவரும் அறிந்ததே. திருப்புவனம் போல் செயல்பட்டார் எனில் முளையிலேயே அதற்கான தீர்வினை அவர்கள் அளிப்பார்கள்.

🔥
🛡 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பது ஒரு சமரசமற்ற இயக்கம். இதில்  ஒரு உறுப்பினருக்கு பாதகம் என்றாலும் ஒட்டுமொத்த இயக்கமும் அவர் பின்னே நிற்கும் என்பதை பல நிகழ்வுகள் மெய்யாக்கியுள்ளது.

🔥
🛡 கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் திருப்புவனம் வட்டாரக்கல்வி அலுவலர் அவர் பணியேற்ற ஓராண்டிற்குள் அங்கு இருந்து மாற்றப்பட்டுள்ளார். விசாரணையின் முடிவும் அதற்கான நல்ல தீர்வினை தரும் என நம்புகிறோம்.

_தகவல்_
*தோழர்.முத்துப்பாண்டியன்.ஆ*
_மாவட்டச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - சிவகங்கை*

*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:

Post a Comment