┈┉┅━❀🅣🅝🅟🅣🅕❀━┅┉┈
┉┅━❀🅢🅘🅥🅐🅖🅐🅝🅖🅐🅘❀━┅┉
•┈┈•❀☘🦋🌺🐯🇮🇳🕊☘❀•┈┈•
🙏 *இன்றைய பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*🙏
. *_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
🍁 *_ஆடி 14_* 🍁
☘ *_30.07.2018_* ☘
🌺 *_திங்கட்கிழமை_* 🌺
•┈┈•❀🌴🌸🐯🇮🇳🕊🌸🌴❀•┈┈•
💦 *திருக்குறள் :*
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
*விளக்கம்:*
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. நட்பைப்போல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
💦 *பழமொழி*
The Pen is mightier than the sword.
வாளின் முனையை விட பேனா முனை வலிமை வாய்ந்தது.
💦 *பொன்மொழி*
செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்.
-நெல்சன் மண்டேலா
💦 *இரண்டொழுக்க பண்பாடு*
1.இயலாதோரைப் பார்த்து ஏளனம் செய்யாமல், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்.
2. எதையும் மூடநம்பிக்கையுடன் ஏற்காமல், அறிவியல் மனப்பான்மையுடன் ஆராய்வேன்.
📰 *பொதுஅறிவு*
1. பெண்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு எது?
_இஸ்ரேல்_
2. அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம் எது?
_மைசூர்_
💦 *English words and. Meanings*
Appreciation - பாராட்டு
Recognition - அங்கீகாரம்
Angry - கோபம்
Forehead - நெற்றி
favour - அநுகூலம்
💦 *நீதிக்கதை*
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூறக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது.
நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
வாழ்க வளமுடன்
📰 *இன்றைய செய்திகள்*
1. தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்.- GER - Gross Enrollment Ratio) கடந்த கல்வியாண்டைக் காட்டிலும் நடப்பாண்டு 1.7 சதவீதம் அதிகரித்து 48.6 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு (2016-17) தமிழகத்தின் ஜி.இ.ஆர். 46.9 சதவீதமாக இருந்தது.
2. லாபகரமாகச் செயல்பட்டு வரும் எல்ஐசி உள்ளிட்ட காப்பீட்டுக் கழகங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் என காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் அமானுல்லா கான் தெரிவித்தார்.
3. இந்தியா- நேபாளம் இடையேயான சிந்தனையாளர்கள் மாநாடு, நேபாளத் தலைநகர் காத்மாண்டில் நாளை தொடங்குகிறது.
4. ரஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் செளரவ் வர்மா, இரட்டையர் பிரிவில் குஹு-ரோஹன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
5. இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
┈┉┅━❀🅣🅝🅟🅣🅕❀━┅┉┈
┉┅━❀🅢🅘🅥🅐🅖🅐🅝🅖🅐🅘❀━┅┉
◆•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•◆
No comments:
Post a Comment