https://drive.google.com/file/d/17D07qXvpn9parLW-xqzHKAUWrkkxGr06/view?usp=drivesdk
Tuesday, August 21, 2018
விடுப்பு விதிகள்
https://drive.google.com/file/d/17D07qXvpn9parLW-xqzHKAUWrkkxGr06/view?usp=drivesdk
Wednesday, August 8, 2018
கலைஞர் கருணாநிதி மறைவுக்கு TNPTF மாநில மையம் இரங்கல்
🔥
🛡தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற தொண்டாற்றிய மாபெரும் மக்கள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
🔥
🛡தன்னுடைய காந்தக்குரலால், இலக்கியத்திறனால், இணையற்ற பேச்சாற்றலால், நிகரற்ற நிர்வாகத்திறனால் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
🔥
🛡ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது அவர் கொண்டுவந்த திட்டங்கள் தமிழ்நாட்டின் எல்லாத்தரப்பு மக்களையும் ஏதாவது ஒரு வகையில் சென்றடைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
🔥
🛡ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனில் அக்கறைகொண்டு அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
🔥
🛡முதன்முதலாக தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாநில அரசின் 5-வது ஊதியக்குழுவின் மூலமாக 01.06.1988 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொகுப்பூதிய ஒழிப்பு மாநாட்டை நடத்திய போது அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் அம்மாநாட்டிற்கு திரு.ஆற்காடு வீராச்சாமி அவர்களை அனுப்பி வைத்து வாக்குறுதி அளித்ததோடு தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 2006-ல் ஆட்சிக்கு வந்தவுடன் காலமுறை ஊதியம் வழங்கி ஆணை பிறப்பித்தவர்.
🔥
🛡தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பக முன்னுரிமையின் படி ஆசிரியர் பணி நியமனங்கள் வழங்கி ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆசிரியர்களாக நியமனம் பெற வழியேற்படுத்தியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
🔥
🛡அடுத்துவந்த அ.தி.மு.க ஆட்சியில் வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனம் என்ற உரிமை பறிக்கப்பட்டபோது , அதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் காமராஜர் சிலையருகே 01.10.2005 அன்று பத்தாயிரம் ஆசிரியர்களுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் 01.10.2005 முரசொலி பத்திரிக்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்டம் ‘ சமூக நீதிக்கான போராட்டம்” என்று வர்ணித்து எழுதியதை மறக்க முடியாது.
🔥
🛡பொதுவாழ்க்கையில் 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர்க்குணத்துடன் செயலாற்றியவர். போர்க்குணத்தையும், போராட்டக்களத்தையும் மதித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
🔥
🛡அரசியல் தொண்டுடன், சமூகத் தொண்டுடன், பெருந்தமிழ்த் தொண்டையும் ஆற்றிய தன்னிகரில்லாத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
🔥
🛡அவரது உடல் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் எழுதிய சாகாவரம் பெற்ற இலக்கியங்களான நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பியப் பூங்கா, குறளோவியம், சங்கத்தமிழ்,கவிதை மழை போன்றவற்றில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.
🔥
🛡உலகெங்கும் வாழும் தமிழ்நெஞ்சங்களை உலுக்கிவிட்ட டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
சென்னை.
07.08.2018.
- ச.மயில்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
Monday, August 6, 2018
சுதந்திர தின பாடல்கள் , பேச்சு, கட்டுரை
Click here to download
https://tnmanavan.blogspot.com/2018/02/republic-independence-special-day.html
Friday, August 3, 2018
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோன்றிய வரலாறு.-2
*🔴🔥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோன்றிய வரலாறு....*
*🔥1982 டிசம்பர் 6 லிருந்து 2.8.1984-TNPTF தோன்றும் வரை நடந்த நிகழ்வுகள்...*
*🔥நேற்றைய தொடர்ச்சி...*
*மாநில செயற்குழு*
1984 சூலை 27ல் மாநிலச் செற்குழு மதுரையில் கூடியது. மாநில அலுவலகக் கட்டட நிதி வசூலை மாவட்டங்கள் ஒப்படைத்தன. 5.2.84 மாநிலச் செயற்குழு தீர்மானங்களின் மீதான விவாதம் கடுமையாயிற்று. இத் தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களுக்கு ஒப்புதலோ தகவலோ இல்லாமல் தன்னிச்சையாக மாநிலப் பொறுப்பாளர்கள் அந்த மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை ஈரோடு, கோவை, மாவட்டச் செயலாளர்கள் ஆதாரங்களுடன் தெரிவித்தனர். விவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.சந்தம் அதிகமானதால் வெளியே இருந்த இயக்க முன்னணியினர் திருப்பரங்குன்றம் கே.ஏ. தேவராஜன். மதுரை மேற்கு எல்.கோபாலகிருஷ்ணன் கம்பம்.வீ.பழனிச்சாமி, போடி எம்.பொன்னையா மற்றும் பலரும் அறைக்கதவை ஓங்கித் தட்டி திறக்கச் செய்தனர். செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதம் நடத்துங்கள் தகராறுகள் வேண்டாம் என எச்சரித்து அறிவுரை கூறினர். செயற்குழு முடிக்கப்பட்டது. பொதுக் குழுவை சந்திப்போம் என்று கூறிக்கொண்டே கலைந்தனர்.
மாநிலத் தலைமையின் சுமுகமற்ற பிடிவாதத்தன்மையைக் கண்ட நீலகிரி மாவட்டக் கிளையும், கன்னியாகுமரி மாவட்டக் கிளையும் சனநாயக மற்ற இயக்க ஒற்றுமைக்கு எதிரான 5.2.84 தீர்மானங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என விரும்பின. அன்று இருந்த மொத்தம் 16 மாவட்டங் களில் வெளிநடப்புச் செய்த 7 மாவட்டக் கிளைகளுடன் இந்த இரண்டு மாவட்டக் கிளைகளும் இணைந்து 9 மாவட்டங்கள் 5.2.84 தீர்மானங்களுக்கு எதிராக இருந்தன. பெரும்பாலான வட்டார/நகரக் கிளைகளும் அமைப்பு விதித்திருந்தங்களுக்கு உடன்பாடின்மையைத் தெரிவித்த போதிலும் அவற்றைப் பொதுக்குழுவில் நிறைவேற்றிடவே தலைமை விரும்பியது.
*🔥பொதுக்குழு...*.
*🔥 5 2.84 செயற்குழு தீர்மானங்கள் மீது எதிர்ப்பு தெரிவித்ததற்காக மொத்தமுள்ள அப்போதைய 16 மாவட்டங்களைச்சேர்ந்த ஒன்பது மாவட்டச்செயலாளர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியிலிருந்து நீக்கமும்-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உதயமும்...*
2.8.84 ல் சென்னையில் கனவேல் திருமண மண்டபத்தில் மாநிலப் பொதுக்குழு கூடியது. 5.2.84 தீர்மானத்திற்கு உடன்பாடில்லாதவர்கள் ஒரு பகுதியாகவும் உடன்பட்டவர்கள் ஒரு பகுதியாகவும் அமர்ந்திருந்தனர். மாநிலத் தலைவரும், பொதுச் செயலாளரும் பேசினார்கள். செயற்குழு தீர்மானங்களைப் பொதுக்குழுவின் ஏற்புக்கு முன் வைத்தனர். மிகக் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
மண்டபத்திற்கு வெளியே வந்த பொதுச் செயலாளர் சு.ஈசுவரன் என்னிடம் "ஒற்றுமைக்கான வழி என்ன?" என்று வினவினார். "ஒரே வரி 5.2.84 செயற்குழு தீர்மானங்களை பொதுக்குழு ரத்து செய்கிறது, என்று ஒற்றை வரித் தீர்மானம் ஒற்றுமையைச் சிதைக்காது" என்ற ஆலோசனை ஏற்கப்படவில்லை.
காரசாரமான விவாதங்களுக்கிடையே நாடாளுமன்றம் போல் பொதுக்குழு உணவு இடைவேளை என ஒத்தி வைக்கப்பட்டது. பொதுக்குழு நடைபெற்ற இடத்திலேயே உணவுபரிமாறப்பட்டது. ஒரு பகுதியினர் உணவருந்தினர். மற்றொரு பகுதியினர் உணவருந்த உடன்படாமல் தாங்கள் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சாப்பிட மறுத்தவர்களின் மீது வீசிய எள்ளல் பேச்சுக்கள் சூடேற்றி விட்டன. இதனை ஆட்சேபித்து அவர்கள் எழுப்பிய முழக்கங்களால் வெளியில் திரண்டிருந்த ஆசிரியர்கள் மண்டபத்திற்குள் நுழைந்து விட்டனர். பதற்றம் நிலவியது.
உணவு இடைவேளை முடிந்து மீண்டும் பொதுக்குழு கூடியதும் 5.2.84 தீர்மானங்கள் ஏற்கப்பட்டதாகவும் இதை எதிர்த்த 9 மாவட்டச்
செயலாளர்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் பொதுச் செயலாளர் சு.ஈசுவரன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை ஆட்சேபித்த 9 மாவட்டச் செயலாளர்களும் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களும் அதே மண்டபத்தில் ஒரு பகுதியில் கூடி சுர்வாதிகாரத்தன்மை கொண்ட தலைவர் ஜே.எஸ்., இராசு, பொதுச் செயலாளர் .சு.ஈசுவரன், மாநிலப் பொருளாளர் து.இளங்கோ ஆகியோரைப் பொறுப்புக்களிலிருந்து நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.
மூத்த மாவட்டச் செயலாளர் நெல்லை மி.முத்தையா மாநிலத் தலைவர் பொறுப்பிற்கும், தஞ்சை மாவட்டச் செயலாளர் ந.வீரையன் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு
தென்னார்க்காடு மாவட்டச் செயலாளர் ச.அப்துல் மஜீத் ஆகியோர் பெயர்களை முன்மொழிந்தனர்.
இந்த முன்மொழிவுகள் ஒரு மனதாக ஏற்பு செய்யப்பட்டனர்.கர ஒலியுடனும் இயக்க முழக்கங்களுடனும் மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இராயப்பேட்டை மண்டபத்தில் பொதுக் குழுவை நடத்தினர்.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்திருந்த 3.8.1984 தொடக்கக் கல்வி இயக்ககம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தையும் .4.8.1984 சென்னை ஆர்ப்பாட்ட ஊர்வலம் பேரணியையும் திட்டமிட்டபடி நடத்திட ஏற்பாடுகளைச் செய்தனர். இந்த இரண்டு போராட்டங்களும் வெற்றிகமாக நடந்தது.
*🔥"பிறக்கும்போதே போராட்டத்தில் குதித்த இயக்கம் - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ". என்ற முழக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது.*
ஜே.எஸ் இராசு தலைமையிலான அணியும் இந்தப் போராட்டங்களை நடத்தியது.பேரணியில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வந்த இயக்க உறுப்பினர்கள் பொதுக்குழுவில் நிகழ்ந்தவற்றை அறிந்து பேரணியில் புதிய தலைமையை ஏற்று ந.வீரையன் தலைமையின் கீழ் உற்சாகத்தோடும், ஆரவாரத்தோடும் அணிவகுத்து புதிய தலைமையின் வலிமையை நிரூபித்தனர்.
*🔥ஊத்துக் குளியில் கூடிய மாநில செயற்குழு மாஸ்டரின் வழித்தோன்றல்கள் என்ற உரிமையை உள்வாங்கி அவரால் பயரிடப்பட்ட "சென்னை ராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் ". என்பதை "தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி " என்ற பெயரில் இயக்கப் பயணம் தொடர முடிவு செய்தது.*
இதே காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திலிருந்து பிரிந்து 6.5.1984ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உருவாகியிருந்தது. "அ" வைத் தொடர்ந்து "ஆ" அமைந்ததால் "அரசு ஊழியர் சங்கமும் " _" ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் " இரட்டைக் குழல் துப்பாக்கிகளாயின.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியிலிருந்த பலரும் தன்னெழுச்சியாக வட்டார, மாவட்ட அமைப்புகளை ஏற்படுத்தினர்.கடந்த காலங்களில் சிறைச் செம்மல்கள் எனப் பலரும் உற்சாகத்துடன் பொறுப்பாளர்களாயினர்.
*🔥"2.8.1984 லிருந்து இன்று வரை கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன், மக்கள் நலன் என்ற திசைவழியிலும் கூட்டுத் தலைமை என்ற தத்துவத்தின் வழியிலும் சுயநலம் சிறிதும் இன்றி ஆசிரியர் நலன்களுக்காக தொடர்ந்து சமரசமற்ற போராட்டங்களை மேற் கொண்டு தொடர்ந்து 35 வது ஆண்டில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்' கூட்டணி தனது தனித்துவமான போராட்டக்குணத்துடன் பயணிக்கிறது".*
_நன்றி.
தோழர். மா.ச.முனுசாமி எழுதிய ஆசிரியர் இயக்க வரலாற்றில் எனது நினைவலைகள்...
*_🅒тиρтfνιZнυdнυgαℓ.вℓσgѕρσт.¢σм_*
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - வரலாறு
*2018 ஆகஸ்ட் 2
*TNPTFன் 35-வது இயக்க நாள்
கற்பிக்கும் நாம்
கற்க வேண்டிய
கடந்த கால
கள வரலாறு!
இயங்காத எதுவும்
இயக்கம் அல்லவே! - இது
இயக்க வரலாறல்ல,
இயங்கிய வரலாறு!
நமக்காக நம்முன்னோர்
நேற்றுவரை இயங்கியபடி
நாளைய நம்மவர்க்காய்
நாமும் தொடர்ந்திட,
நினைவூட்டலாய் இப்பதிவு!
🔥
🛡 கேரளத்தின் மலபார், கர்நாடகத்தின் மங்களுர், ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், தமிழகத்தின் 25 மாவட்டங்கள் உள்ளடங்கிய *சென்னை இராஜதானியில் முதன் முதலில் மலபாரில் தான் ஆசிரியர் சங்கம்* உதயமானது.
🔥
🛡 கோழிக்கோடு, வளநாடு, பொன்னாஜி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் பகுதிவாரியாகவும், தாலுகா அளவிலும் *அகில மலபார் உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கம் 1936-ல்* வடகரையில் உருவாக்கப்பட்டது.
🔥
🛡 ஆரம்பப்பள்ளி முதல் கல்லுரி வரை பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்ட சங்கமாக *தென்னிந்திய ஆசிரியர் சங்கம்* செயல்படத் தொடங்கியது. SITU(South Indian Teachers' Union) அமைப்பில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதன்மையாக்கப்படவில்லை. சங்க பொறுப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை.
🔥
🛡 _இந்தியா விடுதலை பெற வேண்டும் அன்னிய ஆட்சி அகற்றப்பட வேண்டும், என்ற தீர்மானத்தை நிறைவேற்ற அன்றைய தலைமை மறுத்து வெளிநடப்பு_ செய்த சமயத்தில் *மாஸ்டர் இராமுண்ணி தலைமைப் பொறுப்பை ஏற்று* அத்தீர்மானத்தை நிறைவேற்றினார்.
🔥
🛡 *1946-ல்* பெல்லாரியில் நடைபெற்ற மாநாட்டில் ஈ.எம்.சுப்பிரமணியம் தலைவராகவும் வா.இராமுண்ணி பொதுச்செயலாளராகவும் கொண்ட *சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம்* என்னும் புதிய சங்கம் அமைக்கப்பட்டது.
அம்மாநாட்டில்,
★ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12, ரூ.18, ரூ.50
★ஆண்டுக்கு ஒருமுறை ஊதியம் அல்லாது *மாதந்தோறும் ஊதியம் வழங்க* வேண்டும்
என்னும் கோரிக்கைகளுடன் *வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு* அறைகூவல் விடப்பட்டது.
🔥
🛡 🚲🚩🚲🚩🚲🚩🚲🚩🚲🚩🚲🚩
*மிதிவண்டிப் பிரச்சாரப் பயணம் :*
மாஸ்டர் இராமுண்ணி தலைமையில் 13.01.1947 அன்று மிதிவண்டி பிரச்சாரப்பயணமாக கோழிக்கோட்டிலிருந்து 19 ஆசிரியர்கள் பயணம் மேற்கொண்டு பாலக்காடு, கோவை, சேலம், வேலூர், காஞ்சிபுரம் வழியாக 30.01.1947 அன்று சென்னையை அடைந்து முதல்வர் பிரகாசத்திடம் மாநாட்டுத் தீர்மானங்களை அளித்தனர்.
*1949ல் சென்னை இராஜதானியின் தலை நகரான சென்னையில் முதல் மாநாடு* நடத்தப்பட்டது. அது முதல் மாஸ்டர் சென்னையில் குடியேறி பொதுச்செயலாளர் பணியை ஆற்றினார்.
*1952-ல்* முதல்வர் இராஜாஜியின் *குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து* சென்னையில் நடைபெற்ற 2ம் மாநில மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.
தஞ்சையில் இராமையாத்தேவர், சேலத்தில் ராமசாமி ரெட்டியார் தலைமையில் 2-வது மதிவண்டிப் பேரணி நடத்தப்பட்டு அது சென்னையை அடைந்தது.
*1956-ல்* மொழி வழி மாநிலங்கள் உருவானதால் சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளம் என்பது *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
*1979-ல்* உள்ளாட்சி நிறுவனங்களின்
★அதிகாரத் தலையீடு
★அதிகாரத் துஷ்பிரயோகம்
★விதி மீறல்கள்
★ஓய்வூதியம்
உள்ளிட்ட சலுகைகளுக்காக மறியல் போராட்டம்.
*1981-ல்* ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களை *அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி* நடைபெற்ற *மறியல்* போராட்டம்.
*1983-ல்* கல்வியல்லாத *பிற பணிகளிலிருந்து விடுவிக்க* நடைபெற்ற *மறியல்* போராட்டம்
போன்ற வீரம் செறிந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஈடுபடுத்திச் சிறை சென்று குறிப்பிடத்தக்க உரிமைகளையும் பலன்களையும் பெற்றுத்தருவதில் பெரும் பங்காற்றியவர்கள் நமது இயக்க முன்னோடிகள்.
1936 முதல் 1984 வரை உள்ள 48 ஆண்டுகளின் வரலாறும் படிப்பினைகளும் நமது முன்னவர்தம் உழைப்பும் தியாகமும் இணைந்ததாகும்.
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🔥
🛡 *தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) உதயம்:*
இராமேஸ்வரத்தில் நடந்த மாநிலத் தேர்தலுக்குப்பின் எதேச்சதிகாரத் தலைமை, கிளை உறுப்பினரை நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை 05.02.1984ல் முன் வைத்தது. அதனை எதிரத்து 9 மாவட்டச் செயலாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
1984 மே மாதத்தில் மதுரையில் நடந்த மாநிலச் செயற்குழுவில் அடிதடி ஏற்பட்டது.
_ஏகாதிபத்திய எதிர்ப்பும், நாட்டு நலனில் அக்கறையும் கொண்ட இலட்சியத்தோடு தொடங்கப்பட்ட அமைப்பு இடைக்காலத்தில் திசைமாறிப்போனது._
02.08.1984ல் 9 மாவட்டச் செயலாளர்களை டிஸ்மிஸ் செய்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள்.
சங்க ஜனநாயகம் கேள்விக்குறியாக, சுயநலம், துரோகத்தன்மை, சந்தர்ப்பவாதம் கொண்ட தலைமையிடமிருந்து வெளியேறி,
(அவர்களிடையே இன்றுவரை உள்ளது போன்றே அன்றும்) அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் & உயர் அலுவலர்களுக்கு விசுவாசும் உள்ளவர்களாக மாறி உறுப்பினர்களின் நலன்களை அடகு வைப்பதும், சங்க அங்கீகாரம் பெறுவதும் அதைப் பாதுகாப்பதுமாக மாறிய போலித் தலைமையைத் துக்கி எறிந்து புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது.
*சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணன் தெரு கனகவேல் திருமண மண்படத்தில் வீரம் செறிந்த இயக்கமாக, ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகவும் குறிக்கோள்களுக்காகவும் உறுதியோடு தொடர்ந்து போராடும் ஒரு உன்னத அமைப்பாக 02.08.1984-ல் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவாக்கப்பட்டது.*
அரசின் அங்கீகாரம் ஒன்றே பிரதானம் என்பதைத் தகர்த்து கூட்டமைப்புகளுக்கு அது அவசியம் இல்லை என்று மாற்றியமைத்து,
★ஜாக்சாட்டோ
★ஜாக்டா
★ஜேக்டீ
★அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு
★டிட்டோஜாக்
★ஜாக்டோஜியோ
★ஜாக்டோ
★ஜியோ
★கோட்டாஜியோ
போன்ற கூட்டமைப்புகளை நமது முன் முயற்சிகளின் காரணமாக உருவாக்கி, *மத்திய அரசுக்கு இணையான ஊதியம்* உள்ளிட்ட பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
🔥
🛡 *முதல் மாநில மாநாடு*
1970 முதல் 1985 வரை ஏற்பட்டிருந்த பொருளாதார இழப்புகளைச்சுட்டிக்காட்டி முதல் மாநாட்டை *05.05.1985-ல்* சென்னையில் நடத்தினோம். இழப்புகளை மீட்க இயக்கங்களின் மகத்தான ஒற்றுமை ஏற்பட வேண்டும் என அம்மாநாட்டில் அறைகூவல் விடப்பட்டது.
*4-வது ஊதியக்குழுவில் வெறும் 7% மட்டும் ஊதிய உயர்வு* அறிவிக்கப்பட்ட போது நாம் *11.07.1985 அன்று சென்னையில் 5000 பேர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்* நடத்தியதன் விளைவாக தொடக்க நிலையில் இருந்த மூன்று சங்கங்கள் இணைந்து *ஜாக்டோ உதயமாகியது.*
ஜாக்டோ என்னும் சிறு தீ காட்டுத் தீயாக மாறி *ஜாக்டீ* என்னும் பதாகையின் கீழ் வேலை நிறுத்தம், மறியல் என *3.11.1985-ல் அரசாணை எதிர்ப்புப் போராட்டம்* வரை நடத்தப்பட்டது.
*கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் என 10000-க்கும் மேற்பட்ட பெண்* ஆசிரியர்கள் உள்ளிட்ட *65000 ஆசிரியர்கள் தீபாவளித் திருநாளிலும் சிறையில் அடைக்கப்பட்டனர்.*
*40 நாட்கள்* சிறையில் அடைத்தும், அன்றைய முதல்வர் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என மிரட்டியும் பணியவைக்க முயன்றார்.
இறுதியில் வரலாறு காணாத எழுச்சியின் காரணமாக அரசு பணிந்தது.
இவ்வீரம் செறிந்த வேலை நிறுத்தத்தில், *தாய் இயக்கம் என்றும் பேரியக்கம்* என்றும் கூறிக்கொள்பவர்கள் அவர்களின் இயல்பான குணங்களின் காரணமாக *இடையில் வந்து இணைந்து* போராட்டத்திலிருந்து *பிரிந்து போன வரலாற்றுக் கறுப்பு நிகழ்வுகளும்* நடந்தது.
🔥
🛡 *இரண்டாம் மாநில மாநாடு*
மத்திய அரசின் 4-ஆம் ஊதியக்குழு அறிவிப்பு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் பெற வேண்டும் என்ற வேட்கை தமிழக அரசின் ஒரு நபர் குழுவால் வஞ்சிக்கப்பட்ட ஆசிரியர்களிடயே ஏற்பட்டது.
*5-6.03.1988* தேதிகளில் *மதுரையில்* நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் *2ஆம் மாநில மாநாடு மத்திய அரசிற்கு இணையான ஊதியம்* வேண்டும் என்ற கோரிக்கையை பிரகடனப்படுத்தி ஆசிரியர் நெஞ்சங்களில் ஆழமாகப் பதியவைத்தது.
இக்கோரிக்கையை அடைய அரசு ஊழியர்களும் இணைந்த பரந்துவிரிந்த ஒற்றுமை தேவை என்பதை வலியுறுத்தி
*ஜேக்டீ* - அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு உருவாக்கப்பட்டு மகத்தான *வேலைநிறுத்தம்* 22.06.1988 முதல் 23.07.1988 வரை *31 நாட்கள்* நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தனிப்பெரும் முதல் சக்தியாக நாம் பங்கேற்று உருக்கு போன்ற போராட்டக் குணத்தை நிலைநாட்டினோம்.
அன்றைய *ஆளுனர் திரு.அலெக்சாண்டர்* அவர்களால் இக்கோரிக்கைகள் *கொள்கை அடிப்படையில் ஏற்கப்பட்டு* அதை நடைமுறைப்படுத்த *5-ம் ஊதிக்குழு அமைக்கப்பட்டது.*
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோரிக்கை 05.06.1989 அன்று 5ம் ஊதியக்குழுவின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு *01.06.1988 முதல் மத்திய அரசிற்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்பட்டது.*
இவ்வீரஞ்செறிந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அரசு அறிவித்த இடைக்கால நிவாரணம் *ரூ.70-க்கும்* மருத்துவப்படி *ரூ.15க்கும்* துரோக ஒப்பந்தத்தில் *கையெழுத்திட்டு இடையில் போராட்டத்திற்கு வந்து இடையில் ஓடிய துரோகிகளும் உண்டு.*
🔥
🛡 *மூன்றாம் மாநில மாநாடு*
நாட்டின் சுதந்திரம் தேசிய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட, கல்விக் கொள்கை மக்கள் நலன் சார்ந்ததாக உருவாக்கப்பட கல்விக்கு மத்திய அரசு 10%, மாநில அரசு 30% நிதி ஒதுக்கிட வேண்டும் என வலியுறுத்தி *21, 22 மார்ச் 1992* தேதிகளில் மூன்றாம் மாநில மாநாடு *சென்னையில்* நடைபெற்றது. *முதன் முதலாக பெண் ஆசிரியர் மாநாடும்* அம்மாநாட்டில் *நடத்தப்பட்டது.*
🔥
🛡 *நான்காம் மாநில மாநாடு*
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் தனியார் மயம், தாராளமமயம், உலகமயம் என்னும் பெயரில் *பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஆபத்து* அதிகரித்து வந்தது.
மாணவர் நலன், ஆசிரியர் நலன், மக்கள் நலன்களுக்கு எதிராக மத்திய அரசின் கல்விக் கொள்கையின் மாற்றம் என்னும் ஆபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் தங்களது கொடிய பாதங்களைக் கால்பதிக்கத் துவங்கின.
1964 முதல் நடைமுறையில் இருந்து வந்த *ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:20 என்பது 1:40 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டது.*
இவைகளை *எதிர்க்க* வலியுறுத்தி அறைகூவல் செயற்திட்டங்களை வகுத்துக் கொடுத்த மாநாடு தான் *சென்னையில் 3, 4 மே-1998-ல்* நடைபெற்ற நான்காம் மாநில மாநாடு.
🔥
🛡 *ஐந்தாம் மாநில மாநாடு*
★பொதுக்கல்வியைப் பாதுகாப்பது - பலப்படுத்துவது
★ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
★சமவேலைக்கு சம ஊதியம் என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக இயற்கை நியதி மற்றும் சமுகநீதிக்கு முரணாக அமுல்படுத்தி வரும் *தொகுப்பு ஊதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்கிட* வேண்டும்.
★கற்பித்தல் பணி சாராத பிற பணிகளிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
★வேலை நிறுத்த உரிமையை பறிக்கும் *எஸ்மா டெஸ்மா* சட்டங்கள் *திரும்பப் பெற* வேண்டும்.
★போராடிப் பெற்ற போனஸ்,
★சரண்டர் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு,
★ஓய்வு காலச் சலுகைகள்
★கருணை அடிப்படை நியமனம்
உள்ளிட்ட *பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த* வேண்டும்
★மத்திய அரசின் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது போல் *50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து* தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் - அரசு ஊழியர்களுக்கும் *வழங்க* வேண்டும் என வலியுறுத்தி
5-ம் மாநில மாநாடு *கோவையில் 2005 மே 4, 5, 6* தேதிகளில் நடைபெற்றது.
இக்கோரிக்கைகள் மீதான பல உரிமைகளை நாம் மீட்டெடுத்தது நீங்கள் அறிந்ததே.
🔥
🛡 *6-வது மாநில மாநாடு*
★இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம்
★CPS ஒழிப்பு
★தமிழ்வழிக் கல்வி மீட்பு
★அரசுப்பள்ளி பாதுகாப்பு
★கல்வியை வணிகம் & காவிமயமாக்கும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு
உள்ளிட்ட கோரிக்கைகளை பிரகடனப்படுத்தி *30.1.16 -முதல் 1.2.16 வரை கோவில்பட்டியில்* 6-வது மாநில மாநாடு நடந்தது.
_இப்பிரகடனத்தைச் செயலாக்க_
_இயன்றவரை மற்றவர்களுடனோ_
_இல்லையேல் இறுதிவரைத்_
_தனியொரு படையாய்ப்_
_போர்க்களம் நோக்கி_
_படையெடுக்கத் தயார்_
எனம் உறுதியுடன் ஜேக்டா-வை மீண்டும் உருவாக்கி இறுதிவரை, கொண்ட தீர்மானங்களை நிறைவேற்ற அனைவரையும் ஒருங்கிணைத்துச் சென்றோம்.
ஆனால், ஆசிரியர்களின் உரிமை வேட்கையை மதிக்காது, ஆளும் தரப்பை எதிர்க்கத் துணிவின்றி, எதிர்த்தரப்பு எறிவேன் என்ற துணிக்கைகளுக்கு இச்சித்து, தம்மை நம்பியுள்ள இயக்க உறுப்பினர்களை வஞ்சிக்கும் நோக்கில் செயல்பட்ட ஜேக்டோ உறுப்பு இயக்கங்களின் உறுப்பினர் விரோதப் போக்கை இனியும் சகிக்க இயலாது என்ற சூழலில்,
போராட்டத் தீ பற்றி எரிய வேண்டிய காலத்தில் கதவடைத்து உறங்கும் எரிமலையாகச் செயல்படாது கனல் கக்கும் எரிமலையாக *தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்* நடத்தி வந்த *காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் 15.02.2016-ல்* உடன் கரம் கோர்த்தோம்.
21.2.2016 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால்,
★ பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்த வல்லுநர் குழு அமைத்தல்
★ இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம் 7-வது ஊதியக்குழுவில் சரிசெய்யப்படும்
என்ற உறுதியினை, சக இயக்கங்கள் உடன் இயங்க அஞ்சிய, ஆளும் தரப்பிடம் இருந்து பெற்றோம்.
🔥
🛡 *கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு*
மத்திய அரசின் *புதிய கல்விக்கொள்கை 2016* உருவாக்கத்தில் உள்ள மாநில உரிமைப் பறிப்பு, தனியார் மயம், சமசுகிருதத் திணிப்பு, வகுப்புவாதம் உள்ளிட்ட *அபாயங்களைத் தடுத்து நிறுத்திட*
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டியக்கம் 25-ற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர், கல்விச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி *கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு* – *தமிழ்நாடு* எனும் பெயரில் *24.07.2016-ல்,*
ஒருங்கிணைப்புக் குழு *ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பேரா.நா.மணி* & *நிதிக் காப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்லைவர் ச.மோசஸ்* அவர்கள் செயல்படுவது என்றும் முடிவாற்றி உருவாக்கப்பட்டு *30.7.2016-ல்* சென்னையில் *மாநில அளவிலான கருத்தரங்கம்* நடத்தப்பட்டது.
மத்திய அரசு இதற்குச் செவிமடுக்காவிடில் இவ்வபாயம் தொடர்பான விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கும் கொண்டு சேர்ப்பிக்கும் பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
🔥
🛡 *சிவகங்கை மாநிலச் செயற்குழு நகர்வுகள்:*
பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துக. . .
6-வது ஊதியக்குழு இழப்பைச் சரிசெய்து 7-வது ஊதியக்குழுவை அமைத்திடுக. . .
கல்விசார் அமைப்புகளைக் கலந்தாலோசித்து, புதிய கல்விக் கொள்கை தொடர்பான தனது கருத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்திடுக. . . உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து
04.11.2016:
*கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்*
20.11.2016:
*மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம்*
28.12.2016:
*சென்னையில் தொடர் முழக்க போராட்டம்*
நடத்தப்பட்டது. சென்னை தொடர் முழக்கப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் பங்கேற்கச் செய்தோம்.
🔥
🛡 *தைப்புரட்சியில் த.நா.ஆ.ப.ஆ.கூ*
மண்ணின் மாண்பையும், மாடுகளின் வாழ்வையும் காத்து தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த சனவரி 2017-ல் மதுரை அவனியாபுரத்தில் பற்றிய தீ சென்னை மெரினாவை புதிய வரலாற்றுச் சரித்திரம் படைக்கும் களமாக மாற்றிய தைப்புரட்சி எனும் சல்லிக்கட்டு போராட்டத்தில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துக் களங்களிலும் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் தொடர்ந்து கலந்து கொண்டனர்.
🔥
🛡 *கொரில்லாப் போர் பாணியிலான சென்னை முற்றுகை :*
*இடைநிலை ஆசிரியர் ஊதியம், ஓய்வூதியம்* உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, *2017 பிப்ரவரி 3-ல் இயக்குநரகத்தை முற்றுகை*யிடத் துணிந்து களமிறங்கியது போராளிப் பாசறையின் போர்ப்படை. முந்திய தினமே மாநிலத் தலைவர் தோழர்.மோசஸ் அவர்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்த தமிழகக் காவல் துறையின் கணிப்பையும் மீறி மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.பாலச்சந்தர் அவர்களின் தலைமையில் பதுங்கியிருந்து பாய்ந்து முற்றுகையிட்டது தோழர்களின் ஒரு அணி.
அங்கங்கு தனித்தனியே கைது செய்யப்பட்டு தனித்த இடங்களில் சிறைவைக்கப்பட்ட தோழர்கள் அப்பகுதியினையும் முற்றுகையிட்டு தொடர்போராட்டங்களை மேற்கொள்ள இயக்குநரக முற்றுகை சென்னை முற்றுகையாக மாறியது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு அனைவரையும் இறுதியாக ராசரத்தினம் விளையாட்டரங்கில் சங்கமிக்கச் செய்தது.
அதன்பின்னர் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் (தான் பொறுப்பேற்றபின் முதல்முறையாக) & இயக்குநர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை விரைந்து முடிக்க ஆவணம் செய்வதாக ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்பின்னர் நிகழ்ந்த எதிர்பாராத அரசியல் திருப்பங்களால் மீண்டும் கோரிக்கையின் கவனத்தை ஆட்சி & அதிகாரத்தை ஏற்ற புதியவர்களின் கவனத்திற்கு இட்டுச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
🔥
🛡 *மதுரை மாநிலச் செயற்குழு நகர்வுகள்*
பிப்ரவரி-03 இயக்குநரக முற்றுகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளைச் செயல்படுத்தாததை அடுத்து *10.5.17-ற்குப்பின்* 6 பெண் நிர்வாகிகள் உட்பட 19 மாநில நிர்வாகிகள் *இயக்குநரக வாயிலில் காத்திருப்புப் போராட்டம்.*
அதே நாளில் அனைத்து *மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலக*த்தில் மாவட்ட & வட்டாரப் பொறுப்பாளர்கள் *காத்திருப்புப் போராட்டம்.*
*தமிழக விவசாயி*கள் நலனை முன்னிட்டு *25.4.17*-ல் நடைபெறும் *முழு அடைப்பிற்கு ஆதரவு* தெரிவிப்பதோடு அன்று நடைபெறும் *போராட்டங்களில்* இயக்க உறுப்பினர்களும் திரளாகக் *கலந்து கொள்ளுதல்.*
*25.4.17 முதலான TNGEA*-யின் *காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட*த்திற்கு முழு *ஆதரவு* தெரிவிப்பதோடு, அதற்காக *STFI 27.4.17-ல்* அறிவித்துள்ள *மாவட்டத் தலைநகர ஆதரவு ஆர்ப்பாட்டங்களை* வெற்றிகரமாக நடத்துதல்.
*நீட் தேர்வை எதிர்த்து கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு* சார்பில் *5.5.17-ல் சென்னை*யில் நடைபெறும் *தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தில்* மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுடன் அருகாமை மாவட்ட இயக்க உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொள்ளுதல் உள்ளிட்ட இயக்க நகர்வுகளை நடத்தி முடித்தது.
🔥
🛡 *STFI போராட்டம் :*
இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண் ஊதியக்குழுவில் சீர்செய்யப்படும் என்று உறுதியளித்தும், ஊதியக்குழு நடைமுறைப்படுத்தலுக்கான காலம் தள்ளிப் போன நிலையில், ஊதியம், ஓய்வூதியம், சிறப்பாசிரியர்கள் நிரந்தரம் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து STFI *22.7.17-ல் மாவட்டத் தலைநகர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* நடத்தத் தீர்மானித்து கள வேலைகளும் நடைபெற்றன. இந்நிலையில் 2003-ற்குப் பின் JACTTO-GEO அமைப்பு கூட்டுப்போராட்டத்தை அறிவிக்கவே அதைச் செறிவூட்டும் நோக்கில் நமது போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
🔥
🛡 *JACTTO-GEO 2017:*
ஜுன் மாதத்தின் இறுதியில் JACTTO-GEO அமைக்க வந்த அழைப்பை ஏற்று நமது இயக்கமும் அதில் இணைந்து, முரண்பாடு நீங்கிய ஊதியக்குழு நடைமுறைப்படுத்தல் இல்லையேல் 20% இடைக்கால நிவாரணம், CPS ஒழிப்பு முதலியவற்றை வழியுறுத்தி 18.7.2017-ல் மாவட்டத் தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நடைபெற்ற JACTTO-GEO மாநில அமைப்புக் கூட்டத்தில் இக்கூட்டுப் போராட்டத்தை CPSஐ முற்றாக நீக்கும் வரை தொடரவேண்டும் என்ற தீர்க்கமான தீர்மானத்தை நமது மாநிலத் தலைவர் தோழர்.மோசஸ் அவர்கள் முன்மொழிந்து தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5-ல் சென்னைப் பேரணி, ஆகஸ்ட் 22-ல் அடையாள வேலைநிறுத்தம், செப்.7 முதல் தொடர் வேலைநிறுத்தம், (இதன் பயனாக தமிழக 8-வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது) 24.11.2017- ல் வட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டம், 21.02.2018 முதல் 24.02.2018 முடிய சென்னையில் தொடர் மறியல் என்று JCTTO-GEO-வின் போராட்ட முன்மொழிவுகளுக்குக் களத்தை ஆயத்தப்படுத்தி கோரிக்கைகளை வென்றெடுக்கத் தொடர்ந்து இயங்கி வந்தது.
🔥
🛡 *புதுக்கோட்டை - மாநிலத் தேர்தல் :*
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 12-வது மாநிலத் தேர்தல் இன்று (04.03.2018) புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த 12-வது மாநிலத் தேர்தலானது, ஆசிரிய இயக்க வரலாற்றில் மாநிலத் தலைமைப் பொறுப்பிற்கு பெண் தோழர் ஒருவரை முதன் முதலாகத் தேர்வு செய்திட்ட சிறப்பைப் பெற்றது.
அதன்படி, மாநிலத் தலைவராக தோழர் மூ.மணிமேகலை, பொதுச்செயலாளராக தோழர் ச.மயில், மாநிலப் பொருளாளராக தோழர் க.ஜோதிபாபு உள்ளிட்டோர் அடங்கிய புதிய மாநிலக் குழு பொறுப்பேற்றது.
🔥
🛡 *ஜாக்டோ-ஜியோ 2018 :*
24.3.2018* அன்று கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி *மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டப் பேரணி*, 1985, 1988-ல் நடைபெற்ற தலைநகர் முற்றுகையைப் போன்று*மற்றுமொரு வீரஞ்செறிந்த முற்றுகையை, *8.5.2018* அன்று, *இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்களைச் சென்னையில் கூட்டி தலைமைச் செயலக முற்றுகை* நடத்தப்பட்டது. அதன்பின்னர், சூலை 11 - 14 ஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் நமது மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இருமுறை உடல் நலப் பாதிப்பை அடைந்த நிலையிலும் தொடர்ந்து களத்தில் இருந்தார் STFI-ன் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர் ச.மோசஸ்.
🔥
🛡 *சென்னை மாநிலச் செயற்குழு :*
சூலை 8-ல் சென்னையில் மாநிலத் தலைவர் தோழர்.மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி, ஜாக்டோ-ஜியோவில் தொடர்ந்து இயங்கி வந்தாலும் தனிச்சங்க நடவடிக்கையையும் எடுத்தாகவேண்டும் என்று முடிவாற்றப்பட்டது.
8-மாவட்டங்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட முறையற்ற மாவட்ட மாறுதலைக் கண்டித்து, ஜூலை 16-ல் மாவட்ட மாறுதலுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்திடக்கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினைக் களைந்து, மத்திய அரசுக்கிணையான ஊதியம் வழங்கிட வலியுறுத்தித் தனிச்சங்க நடவடிக்கையில் இறங்கும் விதமாக, ஆக. 5 (ஞாயிறு) ஈரோட்டில் விரிவடைந்த மாநிலப் பொதுக்குழு, ஆக. 06 - 15 வட்டார அளவிலான பிரச்சார இயக்கம், ஆக.18 / 19 / 25 / 26 / செப்.1 / 2 மாவட்ட அளவிலான ஆயத்த மாநாடுகள், *செப்.26 (ஞாயிறு) சென்னையில் “இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநாடு* உள்ளிட்டவற்றைத் திட்டமிட்டு,
*கல்வி, மாணவர், ஆசிரியர் & தேச நலனுக்காகத் தொடர்ந்து இயங்கும் இயக்கமாக,*
*தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* என்றும் உள்ளது.
_இயங்கும் இயக்கத்தோடு,_
_ஒன்றுபடுவோம்❗_
_போராடுவோம்❗❗_
_வெற்றி பெறுவோம்❗❗❗_
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*
2018-19 கல்வியாண்டு நாள்காட்டி
நாள்காட்டியை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
https://drive.google.com/file/d/1i38J7xTpFN8x-3sbfw07DQcvvTag2M5V/view?usp=drivesdk
இயக்க நாள் கொண்டாட்டம்
🎉TNPTF இயக்க நாள் விழா🎉
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கொடியேற்றும் விழா
சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 35ம் ஆண்டு இயக்க விழா மாவட்டத் துணைத்தலைவர் மாலா தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் துணை செயலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், மாவட்ட பொருளாளர் குமரேசன் , மாவட்ட துனணச் செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் இயக்க கொடியேற்றி சங்கம் கடந்து வந்த பாதையும் எதிர்கொண்ட சவால்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஊதியக்குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதிகளை களையும்பொருட்டு ஆகஸ்ட் 2 அன்று ஈரோட்டில் நடைபெறும் விரிவடைந்த சிறப்பு மாநிலப் பொதுக்குழுவிலும், செப்டம்பர் 1 அன்று சிவகங்கையில் நடைபெறும் ஊதிய மீட்பு மாநாட்டிலும், அதனை தொடர்ந்து செப்டம்பர் 26 அன்று சென்னையில் நடைபெறும் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநில மாநாட்டிலும் மாவட்டத்திலிருந்து திரளாக பங்கேற்பது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோ, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவக்குமார் சிவகங்கை வட்டாரச் செயலாளர் பஞ்சுராஜ், தலைவர் கலைச்செல்வி. பொருளார் சுரேஷ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Wednesday, August 1, 2018
இன்றைய பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்
┈┉┅━❀🅣🅝🅟🅣🅕❀━┅┉┈
┉┅━❀🅢🅘🅥🅐🅖🅐🅝🅖🅐🅘❀━┅┉
•┈┈•❀☘🦋🌺🐯🇮🇳🕊☘❀•┈┈•
🙏 *இன்றைய பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*🙏
. *_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
🍁 *_ஆடி 17_* 🍁
☘ *_02.08.2018_* ☘
🌺 *_வியாழக்கிழமை_* 🌺
•┈┈•❀🌴🌸🐯🇮🇳🕊🌸🌴❀•┈┈•
☀ *திருக்குறள் :*
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
*உரை:*
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
☀ *பழமொழி :*
A wild goose never lay a lame egg
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
*பொன்மொழி:*
நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.
- தாமஸ் புல்லர்.
☀ *இரண்டொழுக்க பண்பாடு :*
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
☀ *பொது அறிவு :*
1.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
_பர்மா_
2.முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?
_பென்னி குவிக்_
☀ *நீதிக்கதை :*
*அடைந்ததை அழித்தல் - பஞ்சதந்திரக் கதைகள்*
(The Monkey and The Crocodile - Panchtantra Story in Tamil)
ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது.
ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப் பார்த்து, ‘‘நீ என் விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது.
பழங்களை முதலை சாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல்மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி இன்புற்றுக் காலம் கடத்தி வந்தன. தான் சாப்பிட்டதுபோக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டுபோய் தன் மனைவிக்குக் கொடுத்து வந்தது.
ஒருநாள் முதலையின் மனைவி, ‘‘அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது?’’ என்று முதலையைக் கேட்டது.
‘‘அன்பே, ரக்தமுகன் என்றொரு குரங்கு இருக்கிறது. அது என் நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தருகிறது’’ என்றது முதலை.
அதற்கு முதலையின் மனைவி, ‘‘அமிர்தம்போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ என்னை மதிக்கிறாய் என்றால் எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டுவந்து கொடு. அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல் என்றும் உன்னோடு விளையாடிக்கொண்டிருப்பேன்’’ என்றது.
‘‘அன்பே, முதலாவதாக அது நமக்குச் சகோதரன்மாதிரி. இரண்டாவதாக, அது நமக்குப் பழங்களைத் தருகிறது. எனவே அதை நான் கொல்லமுடியாது. இந்த வீணான ஆசையை விட்டுவிடு.’’ என்றது.
அதற்கு முதலையின் மனைவியோ, ‘‘அந்த குரங்கை எனக்காக கொடுக்கவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன்’’ என்று சொல்லி கோவமாக சென்றது.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதன் கண்களில் நீர் நிறைந்தது. ‘‘இனி நான் என்ன செய்வேன்? அந்தக் குரங்கை எப்படிக் கொல்வது?’’ என்று சிந்தித்தபடியே குரங்கிடம் போயிற்று.
வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் குரங்கு பார்த்தது.
‘‘நண்பனே, ஏன் இவ்வளவு நேரம்? ஏன் சந்தோஷத்தோடு பேசமாட்டேன் என்கிறாய்? நல்ல நீதிகளையும் சொல்ல மாட்டேன் என்கிறாய்?’’ என்று குரங்கு கேட்டது.
‘‘நண்பனே, என் மனைவி ‘ஏ நன்றி கெட்டவனே, என் முகத்தில் விழிக்காதே. தினந்தோறும் நீ நண்பனிடம் பழங்களைப் பெற்றுச் சாப்பிடுகிறாய். ஆனால் அதற்குப் பதில் உபசாரம் செய்யும் முறையில் அதை உன் வீட்டு வாசலுக்கும் நீ அழைத்து வரவில்லையே! இந்த செயலுக்கு உனக்கு மன்னிபே கிடைத்து” என்றது
ஆகவே, ‘‘நீ கராலமுகனை நம் வீட்டுக்கு அழைத்து வா. அப்போதுதான் நீ பதில் உபசாரம் செய்ததாகும். இல்லாவிட்டால் நீ என்னை இனிமேல் உயிரோடு பார்க்க முடியாது. மறு உலகத்தில் தான் பார்க்க முடியும்’’ என்று சொன்னாள். அவள் சொற்களைக் கேட்டுவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன்.
‘‘உன் விஷயமாய் அவளோடு சண்டை போட்டதிலே இவ்வளவு நேரமாகிவிட்டது. நீ என் வீட்டுக்கு வா! என் மனைவி ஆவலோடு உன்னை எதிர்பார்த்து, வரவேற்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறாள்.’’ என்றது முதலை.
‘‘நண்பனே, அண்ணி சொன்னது சரிதான். எவ்விதமெனில், தருவது, பெறுவது; மனம்விட்டுப் பேசுவது, கேட்பது; விருந்து உண்பது, படைப்பது; இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள் அல்லவா? ஆனால், நான் காட்டிலும் இருப்பவனாயிற்றே! உங்களுடைய வீடு நீருக்கடியில் அல்லவா இருக்கிறது! அங்கே நான் எப்படி வரமுடியும்?’’ என்றது குரங்கு.
‘‘நண்பனே, கடலுக்கடியில் ஒரு அழகிய மணல்திட்டில் என்வீடு இருக்கிறது. எனவே என் முதுகில் ஏறிக்கொண்டு பயமில்லாமல் இன்பமாய் வா!’’ என்றது முதலை.
குரங்குக்கு ஆனந்தம் பிறந்தது. ‘‘நண்பனே, அப்படியானால் சீக்கிரமாகக் கிளம்பலாமே, ஏன் தாமதிக்கவேண்டும்? இதோ நான் உன் முதுகின்மேல் ஏறிக்கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, குரங்கு முதலையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது.
ஆனால், ஆழமான கடலில் முதலை போவதைப் பார்த்துக் குரங்கு பயந்து நடுங்கிப்போயிற்று. ‘‘அண்ணா மெதுவாகப் போ! அலைகள் அடித்து என் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது’’ என்றது.
அதைக் கேட்டதும் முதலைக்கு ஒரு யோசனையுண்டாயிற்று. இந்தக் குரங்கு என் முதுகிலிருந்து நழுவினால் ஒரு அங்குலம் கூட அப்பால் செல்லமுடியாது, அத்தனை ஆழமான கடல் இது. என் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஆகவே இதனிடம் என் நிஜ நினைப்பைச் சொல்லிவிடுகிறேன். தன் இஷ்ட தெய்வத்தை அது நினைத்துப் பிரார்த்தித்துக் கொள்ளட்டும் என்று எண்ணியது.
குரங்கைப் பார்த்து, ‘‘நண்பனே, என் மனைவி சொல்லியபடி உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்’’ என்றது முதலை.
‘‘அண்ணா, உனக்கோ அண்ணிக்கோ நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொல்லப்பார்க்கிறீர்கள்?’’ என்று குரங்கு கேட்டது.
‘‘கேள், நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்தைத் தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள். அதனால்தான் இப்படிச் செய்தேன்’’ என்றது முதலை.
உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, ‘‘அடடா அப்படியா சங்கதி? அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை? நண்பனே, ருசி மிகுந்த நாவற்பழங்களை நாவல்மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்ட காலம் இளமையுடன் உயிர் வாழலாம்!’’ என்றது குரங்கு.
அதைக் கேட்டதும் முதலைக்கு ஆனந்தம் ஏற்பட்டது. ‘‘நண்பனே, அப்படியானால் அந்த நாவற்பழங்களை எனக்குக் கொடு, என் துஷ்ட மனைவி அதைச் சாப்பிட்டு தன் உபசாவத்தை முடிப்பாள். உன்னை நாவல் மரத்துக்கே திரும்ப அழைத்துச் செல்கிறேன்’’ என்று சொல்லிற்று.
சொன்னபடியே முதலை நாவல்மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது. வழி நெடுக குரங்கு ஒவ்வொரு தெய்வத்தையும் நூற்றுக்கணக்கான முறை வேண்டிக்கொண்டே போயிற்று.
எப்படியோ ஒருவிதமாக கரைக்கு வந்ததும், உயர உயரத் தாவிக் குதித்துச் சென்று அந்த நாவல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. ஏறிக்கொண்டே, ‘‘நல்லகாலம்! நான் பிழைத்துக்கொண்டேன். நம்பிக்கை வைக்கத் தகாதவனிடம் நம்பிக்கை வைக்காதே! நம்பிக்கையானவனையும் நம்பாதே! நம்பிக்கை வைப்பதால் விபத்து ஏற்பட்டு வேரோடு அழித்து விடுகிறது. என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு நிஜமாக நான் மறுபிறப்பெடுத்திருக்கிறேன்’’ என்று குரங்கு எண்ணியது.
குரங்கிடம் முதலை, ‘‘நண்பனே, நாவற்பழங்களை கொடு எனக்கு’’ என்றது.
குரங்கு சிரித்துவிட்டு நிர்ப்பயமாகப் பதில் சொல்லிற்று. ‘‘சீ, மூடா! நம்பிக்கைத் துரோகி! உன்னுடைய உண்மையான குணம் எனக்கு தெரிந்துவிட்டது. உன் வீட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடு. இனிமேல் இந்த நாவல்மரத்தடிக்கு வராதே!” என்றது குரங்கு.
‘‘முட்டாள்தனமாக இதனிடம் என் எண்ணத்தை ஏன் வெளியிட்டேன்? எப்படியாவது இதனுடைய நம்பிக்கையைப் பெற வழியுண்டா? நம்பவைக்கப் பேசிப்பார்க்கிறேன்’’ என்று எண்ணியது.
‘‘நண்பனே, விளையாட்டுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். உன் மனதையறிய விரும்பினேன். அவ்வளவுதான். என் வீட்டுக்கு விருந்தாளியாக வா! அண்ணி உன்னைப் பார்க்க ஆவலோடிருக்கிறாள்’’ என்று முதலை சொல்லிற்று.
‘‘துஷ்டா, உடனே நீ போய்விடு. நான் வரமாட்டேன்’’ என்றது குரங்கு. அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்தது. அந்த இடத்தை விட்டுச் சென்றது.
*நீதி:*
ஒருவன் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால், கண்டிப்பாக ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து ஏமாறுவான்!
📰 *இன்றைய செய்தி துளிகள் :*
1.உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 02.08.2018 ) நடைபெறுகிறது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
2.B.Ed - படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்!
3.காமராஜர் விருதுக்கு, மாவட்ட வாரியாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.
4.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்: மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
5.மகளிர் ஹாக்கி கால் இறுதிக்கு இந்தியா தகுதி
┈┉┅━❀🅣🅝🅟🅣🅕❀━┅┉┈
┉┅━❀🅢🅘🅥🅐🅖🅐🅝🅖🅐🅘❀━┅┉
◆•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•◆
Sunday, July 29, 2018
இன்றைய காலை வழிபாட்டு செயல்பாடுகள்
┈┉┅━❀🅣🅝🅟🅣🅕❀━┅┉┈
┉┅━❀🅢🅘🅥🅐🅖🅐🅝🅖🅐🅘❀━┅┉
•┈┈•❀☘🦋🌺🐯🇮🇳🕊☘❀•┈┈•
🙏 *இன்றைய பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*🙏
. *_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
🍁 *_ஆடி 14_* 🍁
☘ *_30.07.2018_* ☘
🌺 *_திங்கட்கிழமை_* 🌺
•┈┈•❀🌴🌸🐯🇮🇳🕊🌸🌴❀•┈┈•
💦 *திருக்குறள் :*
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
*விளக்கம்:*
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. நட்பைப்போல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
💦 *பழமொழி*
The Pen is mightier than the sword.
வாளின் முனையை விட பேனா முனை வலிமை வாய்ந்தது.
💦 *பொன்மொழி*
செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்.
-நெல்சன் மண்டேலா
💦 *இரண்டொழுக்க பண்பாடு*
1.இயலாதோரைப் பார்த்து ஏளனம் செய்யாமல், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்.
2. எதையும் மூடநம்பிக்கையுடன் ஏற்காமல், அறிவியல் மனப்பான்மையுடன் ஆராய்வேன்.
📰 *பொதுஅறிவு*
1. பெண்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு எது?
_இஸ்ரேல்_
2. அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம் எது?
_மைசூர்_
💦 *English words and. Meanings*
Appreciation - பாராட்டு
Recognition - அங்கீகாரம்
Angry - கோபம்
Forehead - நெற்றி
favour - அநுகூலம்
💦 *நீதிக்கதை*
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூறக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது.
நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
வாழ்க வளமுடன்
📰 *இன்றைய செய்திகள்*
1. தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்.- GER - Gross Enrollment Ratio) கடந்த கல்வியாண்டைக் காட்டிலும் நடப்பாண்டு 1.7 சதவீதம் அதிகரித்து 48.6 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு (2016-17) தமிழகத்தின் ஜி.இ.ஆர். 46.9 சதவீதமாக இருந்தது.
2. லாபகரமாகச் செயல்பட்டு வரும் எல்ஐசி உள்ளிட்ட காப்பீட்டுக் கழகங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் என காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் அமானுல்லா கான் தெரிவித்தார்.
3. இந்தியா- நேபாளம் இடையேயான சிந்தனையாளர்கள் மாநாடு, நேபாளத் தலைநகர் காத்மாண்டில் நாளை தொடங்குகிறது.
4. ரஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் செளரவ் வர்மா, இரட்டையர் பிரிவில் குஹு-ரோஹன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
5. இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
┈┉┅━❀🅣🅝🅟🅣🅕❀━┅┉┈
┉┅━❀🅢🅘🅥🅐🅖🅐🅝🅖🅐🅘❀━┅┉
◆•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•◆










